இப்படிக்கு இவர்கள்

சுதந்திர தின மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

நேருவின் உரை மிகமிக அருமை. 67 ஆண்டுகளுக்கு முன் நாம் சுதந்திரம் பெற்ற அன்று, நம் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரை, நம்மைச் சுதந்திரம் பெற்ற அந்த சந்தோஷத் தருணத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது.

கத்தியின்றி, ரத்தமின்றி, அஹிம்சா முறையில் நாம் பெற்ற இந்த சுதந்திரத்தை அனுபவித்துக் காப்பதுடன், ஜனநாயகக் காற்றை எப்படிச் சுவாசிக்கிறோம் என விளக்கியது பெருமையாக இருந்தது. இன்றைய இளைஞர்கள் அனைவரும் படித்து, சுதந்திர இந்தியாவைக் காக்க வேண்டும் என்ற ஆவலையும் உறுதியையும் ஏற்கவைத்தது அந்நாள் பிரதமரின் உரை.

- உஷாமுத்துராமன், திருநகர்.

SCROLL FOR NEXT