குடிமைப் பணித் தேர்வுகளில் ஆங்கிலப் புலமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்த்தல் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்துதல் ஆகியவை தொடர்பான பிரச்சினையில் மாண்புமிகு உறுப்பினர் முக்தார் அப்பாஸ் நக்வி, முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்றுதானே? இதையும் பேசித்தானே தீர்க்க வேண்டும். பேசுகின்ற மாண்புமிகு உறுப்பினர்கள் எல்லாம், டெல்லி மாநிலத்தின் வருவாய்த் துறை எழுத்தருக்குரிய போட்டித் தேர்வையோ அல்லது கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் இந்தி ஆசிரியருக்குரிய தேர்வையோ பிராந்திய மொழிகளில் நடத்தச் சொல்லவில்லையே?
இந்தியா முழுமைக்குமான அதிகாரிகள் நியமனத்துக்கான போட்டித் தேர்வைத்தானே அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் பிராந்திய மொழிகளில் நடத்தச் சொல்கிறார்கள். உண்மையாகவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற அக்கறை இருந்தால், எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பாக நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் நடத்துங்களேன். இல்லையென்றால், அனைவருக்கும் பொதுவாக, இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் மட்டும் நடத்துங்கள் என்கிறார்.
- மு.தண்டாயுதபாணி, இல்லோடு