‘மூச்சு முட்டுது... உட்கார்ந்து எழும்போதே முழங்கால் மூட்டு நிமிர மறுக்குது... நிமிர்ந்து பார்த்தால் தலையைச் சுத்துது, தினசரி படிக்க மூக்குக் கண்ணாடியைத் தேடணும், காலையில் என்ன சாப்பிட்டோம் என்று இரவில் கேட்டால் யோசனைதான் பண்ண வேண்டும், பிரசவத்துக்கு எப்படியும் அறுவைச் சிகிச்சைதான் செய்ய வேண்டும், 40 வயதில் 90 வயது வந்துவிட்டோமோ என்று நினைக்க வைக்கிறது. ‘முகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா’ படித்தபோது 16 வயதுப் பெண்ணை அடையாளம் கண்டதுபோல இருந்தது நானம்மாளின் வாழ்க்கை.
- ஜெகத்ரட்சகன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…