நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக்கு எவ்வளவு நாட்கள் வந்திருக்கிறார்கள் என்பதைவிட, அவையில் எவ்வளவு விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார்கள் என்பதும் எவ்வளவு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள் என்பதும் மிகவும் முக்கியம். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் உரலிக்குச் (URL) சென்று பார்க்கலாம்:> http://www.prsindia.org/mptrack/16loksabha/
நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை சதவீதம் எவ்வளவு, அவர்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எவ்வளவு, பங்கெடுத்திருக்கும் விவாதங்கள் எவ்வளவு என்ற விவரங்களுடன், எவ்வளவு மசோதாக்களின் நிறைவேற்றங்களுக்கு அவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் அந்த உரலிக்குச் சென்று அறிந்துகொள்ளலாம். முக்கியமாக, சாமானியர்கள் தங்கள் எம்பிக்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளலாம்.
- ஒரு வாசகர், ‘தி இந்து’ இணையதளத்தின் வழியே...