சுதந்திர தினத்தன்று டெல்லி, செங்கோட்டையில் திறந்த மேடையில் 65 நிமிடங்கள் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உரை, சிறுபான்மையினருக்குச் சற்று நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுத்திருக்கிறது. அனைத்துக் கட்சியினரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லவே அரசு விரும்பு கிறது, சாதி மதத்தின் பெயரால் இன்னும் எத்தனை காலம்தான் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது, இதுவரை வன்முறையில் ஈடுபட்டது போதும் என்றெல்லாம் பேசியது மோடிதானா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றதும் மக்கள் மனதில் இருந்த அச்சம், அவநம்பிக்கை எல்லாம் அவரது ஆட்சிமுறையால் நீங்கியது. அதுபோலவே, மோடி பதவியேற்றபோது உலகமே இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் நிலைமை என்னாகுமோ என்று கவலைப்பட்டது. மோடியின் இந்த சுதந்திர தின உரை சிறுபான்மையினருக்கு ஆறுதலாக இருக்கிறது.
- கே. பி. எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி -7.