இப்படிக்கு இவர்கள்

கட்டுமர உறவு

செய்திப்பிரிவு

‘கட்டுமரக்காரர் எனும் சாகசக்காரர்’ கட்டுரையைப் படித்து மனம் நெகிழ்ந்தேன். மீனவர்கள் வாழ்க்கை இயற்கையோடு ஒன்றி உறவாடி இருப்பதைப் பார்த்து வியப்பாக இருந்தது. கட்டுமரத்தைக்கூட தங்களது குடும்பத்து அங்கத்தினராய்க் கருதுவதை எண்ணி மகிழ்ந்தேன். அவர்களது வாழ்க்கையை அருமையாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். நன்றி!

- பானு பெரியதம்பி, சேலம்.

SCROLL FOR NEXT