களந்தை பீர்முகம்மது எழுதிய ‘கம்பன் நமது பெருமிதம் இல்லையா?' கட்டுரை படித்தேன். முன்பு பள்ளிகளில் கம்பராமாயணத் தொடர்நிலைச் செய்யுள் வாழ்க்கை நெறியாகக் கற்பிக்கப்பட்டது. இன்றோ கட்டுரையாளர் குறிப்பிடுவதுபோல மதிப்பெண்ணுக்கான விடையாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
மேலும், முன்பு பட்டிமன்றமாக, வழக்காடு மன்றமாக கம்பன் அலசப்பட்டான். இன்று அந்த வாய்ப்புகள் முற்றாகத் தடைபட்டுவிட்டன. இதிகாசங்களை மக்கள் மதக்கண்ணாடி போட்டுப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். விளைவு அவை அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.