‘கருப்புக்கு வெள்ளையடிப்பது எப்போது?’ தலையங்கம் படித்தேன்.
நியாயமான காரணங்கள் அடுக்கப்பட்டிருந்தன. மத்தியதர வர்க்கம் பிழியப்படும் அளவுக்கு மேல்தட்டு மக்களிடம் நடந்துகொள்வதில்லை என்பதே உண்மை. அதே போன்று அரசியல் கட்சிகளும் இவ்விஷயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஏனெனில், கட்சிகளுக்குப் பணமுதலைகள்தானே பொன்முட்டையிடும் வாத்துகள். இந்தக் கருப்புப் பணப் பூனைகளுக்கு யார் மணி கட்டுவது?
- வி.டி. ராம், ராமநாதபுரம்.