‘அந்த ராயப்பேட்டை எங்கே?’ கட்டுரையைப் படிக்கும்போது ராயப்பேட்டையை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அனுபவித்திருக்கிறார் திரு.வி.க. என்பது நன்கு புலனாகிறது.
‘மூங்கிலும் வண்டும் பறவையும் செவிக்கு அமுதம் ஊட்டும்’என்ற அவருடைய வரிகளைப் படிக்கும்போது, ‘கோல வண்டு யாழ் செய் குற்றாலம், நுண் துளி தூங்கும் குற்றாலம்’என்று திருஞானசம்பந்தர் பாடிய பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
செடிகள், மரங்கள், பூக்கள், விலங்குகள், பறவை இனங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பட்டியலிட்டதைப் படிக்கும்போது ‘நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே’ என்று பாரதியார் இயற்கையை அணு அணுவாக ரசித்தது நினைவுக்கு வருகிறது. சாலையின் இருபுறமும் அசோகர் மரங்களை நட்டார் என்று சரித்திரத்தில் படித்தோம். இப்போதுள்ள அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மரங்களை வெட்டிக்கொண்டிருக்கின்றனர். இதுதான் நாட்டை நேசிப்பதோ என்னவோ?!
- இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.