இப்படிக்கு இவர்கள்

தொழில்நுட்ப அசுரன்

செய்திப்பிரிவு

வாஸந்தி எழுதிய ‘மொழியை விழுங்கும் புதிய சுனாமி' கட்டுரை படித்தேன். தொழில்நுட்பம் என்ற அசுரனின் வலையில் சிக்கி யிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் அவல நிலையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். பக்கத்து அறையில் இருக்கும் தனது மகனை எஸ்.எம்.எஸ். மூலமாக அழைக்கும் நிலையே இன்று உள்ளது. அதுவும் முழுவதுமாக இல்லாமல் துண்டு துண்டாக எழுதி மொழியைக் கொலை பண்ணுவதுதான் கொடுமை. இந்நிலை நீடித்தால் பேசுவதற்கே சொற்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலை வரலாம்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநேல்வேலி.

SCROLL FOR NEXT