‘இந்தியாவில் எப்போது?’ தலையங்கம் படித்தபோது அண்ணல் காந்தியடிகள், தான் கற்றதாகக் கூறிய ஜான் ரஸ்கினின் ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (அன் டூ திஸ் லாஸ்ட்) என்ற நூலின் நினைவே முன் நின்றது.
எவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள்! ‘செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை’ என்ற உயரிய தத்துவத்தையும், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொற்றொடரின் மகத்துவத்தையும் மறந்ததுதான், தொழிலாளர்களின் ஊதிய வேறுபாட்டுக்கு முக்கியக் காரணம்.
- அவிநாசியப்பன் மயில்சாமி, சூலூர்.