இப்படிக்கு இவர்கள்

குரு மந்திரம்

செய்திப்பிரிவு

தவத்திரு நாராயண குரு பற்றிய கட்டுரை மிக அருமை. அறிவுபுரத்தில் ஆற்றிலிருந்து சிவலிங்கம் போன்ற வடிவிலான கல்லை எடுத்து, அதையே சிவலிங்கமாக வைத்துக் கோயில் கட்டினார் என்று கூறும் கட்டுரையாளர், நாராயண குரு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யும்போது, அப்பகுதியில் உள்ள பார்ப்பனர்கள் வந்து, ‘‘சூத்திரனான உனக்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய தகுதியும் உரிமையும் இல்லை’’ என்று ஆட்சேபணை செய்தபோது, தவத்திரு நாராயண குரு, ‘‘உங்களுடைய சிவா பிராமண சிவா. எங்களுடைய சிவா சூத்திர சிவா. எனவே, இதைத் தடுப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை’’ என்று பதில் சொன்னதைக் குறிப்பிட மறந்துவிட்டார்.

மேலும், ‘‘மதம் எதுவானாலும் மனிதன் நல்லவனாக இருக்க வேண்டும்’’ என்ற நாராயண குருவின் தாரக மந்திரத்தையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), உலகனேரி.

SCROLL FOR NEXT