இப்படிக்கு இவர்கள்

புரிந்துகொண்டு வளர்க்க வேண்டும்

செய்திப்பிரிவு

ஐயோ...

முன்தினம்தான் ‘ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்...’ என்ற புத்தகத்தை வாசித்தேன். குழந்தைகளைப் புரிந்துகொள்வதில்தான் நாம் எத்தனை ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிறோம் என இரவெல்லாம் நெஞ்சம் கனக்கப் படுத்திருந்தேன். என் ஒரு வயது மகன் டார்வினை ‘புரிந்துகொண்டு வளர்க்க வேண்டும், புரிந்துகொண்டு வளர்க்க வேண்டும்’ என எனக்கு நானே சொல்லிக்கொண்டு விழித்த காலையில் ‘தி இந்து’வில் வாசிக்க நேர்ந்தது ‘குழந்தைகளை விட்டுவிடுங்கள்!’ கட்டுரையை. விளைவு...? இன்றைய பொழுதை அவ்வளவு எளிதாகக் கடக்க முடியாதபடி ஆக்கிவிட்டது கட்டுரை.

நான் சார்ந்த இயக்கத்தின் மூலமாக மேலும் சில செயல்திட்டங்களை வகுப்பதற்கான சிந்தனைகளையும் அந்தக் கட்டுரை விதைத்துவிட்டது.

- தேனி சுந்தர்

மாநிலச் செயலாளர்/ மாநில ஒருங்கிணைப்பாளர் (கல்வி உப குழு),

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

SCROLL FOR NEXT