‘பெண் இன்று' பகுதியில், இயற்கைப் பொருட்களைக் கொண்டு அழகுசாதனப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் சாமுண்டீஸ்வரியைப் பற்றிய கட்டுரை, பெண்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தருவதாக இருந்தது.
வியாபாரப் போட்டி அதிகமுள்ள இன்றைய உலகில், துணிந்து தனது வியாபாரத்தை மாற்றி யோசித்து, விடாத முயற்சியின் பெயரில், வெற்றி மகுடம் சூட்டிக்கொண்ட சாமுண்டீஸ்வரி போன்ற குடும்பத் தலைவிகள் பாராட்டுக்குரியவர்கள்.
- பி. நடராஜன், மேட்டூர்அணை.