இப்படிக்கு இவர்கள்

யார் பாதுகாப்பார்கள்?

செய்திப்பிரிவு

தமிழ்க் கலாச்சாரத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் சீர்குலைக்கச் செய்பவர்களும் தமிழர்கள்தான். வேட்டி கட்டி வந்தால் உள்ளே விடாதே என்று காவலருக்கு வாய் மொழி உத்தரவிட்ட கிரிக்கெட் கிளப் உறுப்பினர்களும் தமிழர்கள்தான். அதுபோல பள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என உத்தரவு போடும் ஆசிரியர்களும் தமிழர்களே. நம் கலாச்சாரத்தை நாமே பாதுகாக்கவில்லையானால், யார் பாதுகாப்பார்கள்? 1970-ம் ஆண்டு வரை உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் பெரும்பான்மையோர் வேட்டி அணிந்தே பள்ளிக்கு வந்தனர். அடுத்து, கிரிக்கெட் போட்டி நடக்கும்போது, வேட்டி அணிந்துசென்று நமது கண்டனத்தைப் பதிவுசெய்வோம்.

- ஜே. ராஜகோபாலன், நெய்வெலி.

SCROLL FOR NEXT