இட ஒதுக்கீடு தொடர்பாக இன்றைய தலைமுறையினர் மத்தியில் தாங்களே தியாகி என்பதுபோலவும், தாங்களே சாதித்தோம் என்பதுபோலவும் எண்ணங்கள் பரப்பப்பட்டுவரும் காலத்தில் ‘முதல் திருத்தத்தின் மூலவர் காமராஜர்' என்ற கட்டுரை உண்மையை உலகுக்கு உணர்த்தியது. இலவசக் கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டம் மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 7-லிருந்து 37 ஆக உயர்த்தியவர். மூலவர் என்ற சொல்லாட்சி மிகவும் அருமை.
- எஸ். குமார், நாகப்பட்டினம்.