இப்படிக்கு இவர்கள்

மகா கலைஞர்

செய்திப்பிரிவு

‘அம்புலி மாமா'வின் கவர்ச்சி அதில் வெளிவந்த ‘விக்கிரமாதித்தனும் வேதாளமும்' கதைதான். அந்தக் கதைக்கு மிகப் பெரிய கவர்ச்சி அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள். அந்தக் காலத்தில் இந்தப் படங்களைப் பார்த்து வியந்திருக்கிறோமே தவிர, அந்தப் படங்களை வரைந்தவரைப் பற்றி தெரியாது. இப்போது அந்த பிரம்மாவைப் பற்றி தெரிந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.

மிகப் பெரிய சாதனைகளைப் படைத்தவர்கள் மிக அமைதியாக இருப்பதும் இக்காலச் சூழலுக்கு வியப்பானது. ஓவியர் சங்கர் தன் பேட்டியில் தான் படித்த பிராட்வே பள்ளியில் மதிய உணவு அளிக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டு “அப்பவே, படிக்கிற பசங்களுக்குச் சாப்பாடு போட்டது கார்ப்பரேஷன், இப்ப சொன்னா யாரும் நம்ப மாட்டா” என்கிறார். உண்மைதான். நிறையப் பேர் மதிய உணவுத் திட்டத்தை காமராஜர்தான் கொண்டுவந்தார் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் 1930-களிலேயே மதராஸ் மாகாணத்தில் ஆட்சி செய்த ஜஸ்டிஸ் பார்ட்டி ( நீதிக் கட்சி), இந்தியாவிலேயே, முதன்முறையாக மதிய உணவுத் திட்டத்தை உருவாக்கியது மட்டும் அல்லாமல், அதனைச் செயல்படுத்தவும் செய்தது, பலர் மறந்துபோன வரலாற்று நிகழ்வு.

- பேரா. ஜி. விஜயசங்கர், சென்னை.

SCROLL FOR NEXT