'கொள்ளை லாபமா? மிதமான லாபமா?' தலையங்கம் படித்தேன் . என்னைப் போன்ற சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்களுக்கு ஆதரவான தலையங்கம். மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் மிகத் தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
மருந்துக்கு என்று மாதாமாதம் பெரும் தொகையை ஒதுக்கும் என்னைப் போன்றவர்களைக் காக்க யாரேனும் வர மாட்டார்களா என்று ஏங்கியிருந்த காலத்தில் இப்படி ஒரு அறிவிப்பு! அரசுக்கு நன்றி. அந்த அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தலையங்கம் வெளியிட்ட 'தி இந்து'வுக்கும் நன்றி.
- கே. பலராமன், திருவள்ளூர்.