ஆங்கில மருத்துவம் என்பது பெரும்பாலும் அவசரச் சிகிச்சை மற்றும் விபத்துக்கான சிகிச்சை. இதற்கு மட்டுமே 100% நிவாரணம். இதனைத் தவிர்த்து, ஏனைய வியாதிகளுக்கும் 100% நிவாரணம் இல்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
எந்த வியாதிக்கும் பெரும்பாலான ஆங்கில மருத்துவர்கள் சரியான தகவலை நோயாளிக்குத் தெரிவிப்பது இல்லை. ‘சிகிச்சைக்குப் பிறகும்கூட இந்த நோய் வராது… ஆனால் வரும்’ என்று பீதியைக் கிளப்புவார்கள். பக்க விளைவுகளைத் தெரிவிக்காமல் ஆயுள் முழுக்க மருந்தைப் பரிந்துரைப்பார்கள்.
நோயின் வீரியம் மற்றும் பக்கவிளைவுகள் அதிகரிக்கும்போது தவறை நோயாளியின் பக்கமே திருப்புவார்கள். ஒரு ஆங்கில மருத்துவரிடம் காண்பித்துவிட்டு வேறு ஒருவரிடம் காண்பித்தால் வேறு வினையே வேண்டாம்.
- ஸ்ரீபதி, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…