இப்படிக்கு இவர்கள்

ஒருங்கிணைப்பு அவசியம்

செய்திப்பிரிவு

ஆன்டிபயாடிக் மருந்துகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றைய நிலைகுறித்து வெளிப்படையாக மருத்துவர் கணேசன் உண்மைகளைப் பகிர்ந்துகொண்டது பாராட்டுக்குரியது.

மற்ற மருத்துவ முறைகளிலும் நோய்களைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை ஒரு அலோபதி மருத்துவர் கூறுவது நம் நாட்டுக்கே பெருமை. ஆயுர்வேதமும் சித்த மருத்துவமும் பல அரிய சாதனைகளைப் புரிந்துள்ளன. ஹோமியோபதி மருத்துவமும் சாதனை களைப் படைத்துள்ளது. ஒருங்கிணைந்த மருத்துவ முறையால் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற மருத்துவரின் கூற்று சரியானதே.

- இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

SCROLL FOR NEXT