‘தி இந்து'வில், இனி வெள்ளி தோறும், இளைஞர் சமுதாயத்துக்காக, ‘இளமை-புதுமை' என்ற பெயரில் ஒரு இணைப்பு என்ற அறிவிப்பைப் பார்த்ததும் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது - ‘தி இந்து' நாளிதழ் படித்தால் மட்டுமே போதும், அனைத்துத் தரப்பு வயதினருக்கும் ஏற்ற வகையில் அதில் செய்திகள் இருக்கும் ‘அழகாகத் தொடுக்கப்பட்ட மாலை போல' அழகிய வண்ணங்களோடு.
வாசகர்கள் என்றும் விரும்பும் வண்ணம், நடுநிலையோடு செய்திகளை, நாளும் தொகுத்து வெளியிடும், பாரம்பரியமிக்க ‘தி இந்து'வுக்கு மனமார்ந்த நன்றிகள்.
- பி. நடராஜன், மேட்டூர்அணை.