ஆரோக்கிய வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் தேன் தயாரிப்பாளர்களின் வேதனையை வெளிக்கொணர்ந்த ‘தி இந்து’வுக்கு நன்றி.
மார்த்தாண்டம் தேன் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பிரபலம். காரணம், அதன் தரம். தற்போது ஏற்பட்டிருக்கும் பருவநிலை மாற்றம், தேனீக்களுக்கு ஏற்படும் நோய் போன்றவற்றைக் கண்காணித்து, இந்தத் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கானோரின் வேதனையைப் போக்க, பிரத்தியேக ஆராய்ச்சி மையம் மார்த்தாண்டத்தின் உடனடித் தேவை.
- பட்டவராயன், திருச்செந்தூர்.