வேட்டி விவகாரம்போல, சட்டை விவகாரம் ஒன்று எனக்கும் நடந்தது. சென்னை போட் கிளப்பில். 2009-ம் ஆண்டு மே மாதத்தில் நாங்கள் சிலர் போட் கிளப்புக்குச் சென்றோம். நான் குர்தா அணிந்திருந்ததால், எனக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது. கழுத்துப்பட்டி உள்ள சட்டைதான் அணிய வேண்டும் என்று கூறினர்.
டி-ஷர்ட் ஆக இருந்தாலும் அதில் கழுத்துப்பட்டி இருந்தால் அனுமதிக்கப்படும் என்று கூறிவிட்டனர். பிறகு, நண்பர் தன்னுடைய காரில் வைத்திருந்த அவருடைய சட்டையைக் கொடுத்து என்னை அணிந்துகொள்ளச் செய்து நான் உள்ளே சென்றேன். அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் அவர்களுக்காக ஏற்படுத்திய விதிகளை நாம் இப்போது நம் பண்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
- இரா. சுப்ரமணியன், சென்னை.