இப்படிக்கு இவர்கள்

தவறின்றி வேண்டும்

செய்திப்பிரிவு

தேநீர்க் கவிதை குறித்துச் சில கருத்துகள். தமிழில் கவிதை எழுதுகிறவர்கள் தவறின்றி எழுத வேண்டும் என்பது முக்கியமானது. தாய்மொழி தமிழிலேயே தவறுசெய்தால் அது சரியில்லை. எல்லா இடத்திலும் கவிதைக்காக இலக்கணம் பார்க்க வேண்டாம் விட்டுவிடலாம் என்பது சரியல்ல (ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது என்பதுபோன்று).

தமிழரசி தண்டபாணி எழுதியுள்ள கவிதையில்

‘என் கவிதைகள் கண்ணடிக்கிறது (கண்ணடிக்கின்றன )

என் சித்திரங்கள் சிணுங்குகிறது (சிணுங்குகின்றன)

என் காப்பியங்கள் கைத்தட்டி சிரிக்கிறது (சிரிக்கின்றன)’

இதில் அடைப்புக்குள் போட்டிருப்பதுதான் சரியானது. இச்

சொற்களைப் போடுவதால் கவிதையின் அழகு கெட்டுவிடவில்லை. ஒருமை, பன்மை மயக்கங்களுடன் தயவுசெய்து கவிதை எழுதிப் பழகாதீர்கள். இது அன்பு வேண்டுகோள்.

நமது தாய்மொழியில் நாமே எல்லை மீறக் கூடாது.

- பேரா.க. அன்பழகன், தஞ்சாவூர்.

SCROLL FOR NEXT