இப்படிக்கு இவர்கள்

கட்டுரைத் தொடர் அல்ல; சமூகத்தின் கதைகள்!

செய்திப்பிரிவு

'நீர்… நிலம்… வனம்!' தொடரை ஒன்றுக்குப் பத்து தடவை படித்து மகிழ்ந்தேன். சமீப காலத்தில் இவ்வளவு சுவாரசியமான, பயனுள்ள தொடரைப் படித்ததே இல்லை என்று சொல்லலாம். ஒரு புனைகதையைப் படிப்பதுபோல் உள்ளது. நீலத் திமிங்கிலம்பற்றி கட்டுரையாளர் எழுதியிருப்பவை எல்லாமே ஒரு நாவலின் அத்தியாயம்.

சமகாலப் புனைவெழுத்து (தமிழில்) எனக்கு ரசிக்கவே இல்லை; பத்து பக்கத்துக்கு மேல் படிக்கவே முடியவில்லை என்று தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால், பத்திரிகைகளில் நண்பர்கள் அதைக் கட்டுரைகளாக எழுதிவிடுகிறார்கள்... இதெல்லாம்தான் இன்றைய சமூகத்தின் கதைகள்.

சாரு நிவேதிதா, எழுத்தாளர், சென்னை.

SCROLL FOR NEXT