சென்னை, மதுரை, ஈரோடு என்று மாநகரங்களில் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தின் நான்கு ஊர்களில் புத்தகக்காட்சிகள் நடக்கின்றன. சிறிய அரங்குகள், குறைவான வாசகர்கள், செழுமையான உரையாடல்கள் என சிறிய அளவில் தொடங்கியிருக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் பெரும் சமூக வாசிப்புக்கு வித்திடுகின்றன.
சுரண்டை (திருநெல்வேலி மாவட்டம்)
இடம்: காமராஜர் வணிக வளாகம்
நாள்: 06.10.18 - 14.10.18
காரைக்குடி (சிவகங்கை மாவட்டம்)
இடம்: சுபலட்சுமி திருமண மண்டபம்
நாள்: 05.10.18 - 14.10.18
தாராபுரம் (திருப்பூர் மாவட்டம்)
இடம்: சிவரஞ்சனி மகால்
நாள்: 05.10.18 - 14.10.18
புளியம்பட்டி (ஈரோடு மாவட்டம்)
இடம்: நகராட்சித் திருமண மண்டபம்
நாள்: 10.10.18 - 14.10.18