சிறப்புக் கட்டுரைகள்

இந்திய அறிவின் இழந்த பொருளாதாரம்

அறிவை விதைத்தோம்; செல்வத்தை அறுவடை செய்தோமா?

இரா.அர்ஜுனமூர்த்தி

சுதந்​திர இந்​தியா இன்​று, 15.08.2026 -ல், தனது 79 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 80-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது. இந்த வரலாற்​றுச் சிறப்​புமிக்க தருணத்​தில், நாம் அடைந்த சாதனை​களை மட்​டுமல்​லாமல், நாம் இழந்த பெரு​மை​களை​யும், அந்​தப் பெரு​மை​களின் பொருளா​தார மதிப்​பை​யும் திரும்​பிப் பார்க்க வேண்​டிய அவசி​யம் ஏற்​பட்​டுள்​ளது. அந்​தச் சிந்​தனை​யின் வெளிப்​பா​டாகவே இக்​கட்​டுரை எழுதப்​படு​கிறது.

“அறி​வுடை​யார் எல்​லாம் உடை​யார்” என்ற திரு​வள்​ளுவரின் வரி​கள், இந்​திய நாகரி​கத்​தின் அறி​வுச் செழு​மை​யைப் புரிந்​து​கொள்​ளும் திறவு​கோலாகத் திகழ்​கின்​றன. கணிதம் முதல் மருத்​து​வம் வரை, யோகம் முதல் தொழில்​நுட்​பம் வரை, மனிதகுலத்​தின் அறி​வுப் பயணத்​தில் இந்​தி​யா​வின் பங்​களிப்பு அளப்​பரியது.

ஆனால், சுதந்​திரத்​தின் எட்டு தசாப்​தப் பயணத்​தில் இன்று நாம் நம்​மையே கேட்​டுக்​கொள்ள வேண்​டிய ஒரு முக்​கிய​மான கேள்வி உள்​ளது:

ஆயிரக்​கணக்​கான ஆண்​டு​களாக உலகிற்கு வழங்​கிய நமது அறிவை​யும் கண்​டு​பிடிப்​பு​களை​யும், இந்​தி​யா​வின் பொருளா​தார வலிமை​யாக​வும், உலகளா​விய சந்தை மதிப்​பாக​வும் நாம் மாற்​றி​யிருக்​கிறோ​மா? இந்​தக் கேள்விக்​கான விடையைத் தேடு​வதும், வரலாற்​றில் நாம் இழந்த வாய்ப்​பு​களை உணர்​வதும், எதிர்​கால இந்​தி​யா​வுக்​கான புதிய பாதையை வகுப்​பதும் இன்​றைய காலத்​தின் அவசி​ய​மாகிறது.

உலகக் கணிதத்​தின் போக்​கையே மாற்​றிய பூஜ்ஜிய​மும் தசம எண் முறை​யும் இந்​தி​யா​வின் மகத்​தான அறி​வியல் பங்​களிப்​பு​களில் அடங்​கும். பிரம்​மகுப்​தர் பூஜ்ஜி​யத்​தின் கணிதப் பயன்​பாட்டை முறைப்​படுத்​தி​ய​திலிருந்​து, நவீன கணினி மற்​றும் டிஜிட்​டல் உலகம் வரை அதன் தாக்​கம் விரிந்​துள்​ளது. அதே​போல், பிங்​களரின் பண்​டைய கணிதச் சிந்​தனை​கள் பின்​னாளில் உரு​வான இரும எண் முறை​யின் (Binary System) ஆரம்​ப​கால கருத்​துகளு​டன் தொடர்​புபடுத்​தப்​படு​கின்​றன.

இந்த அறி​வியல் சிந்​தனை​களின் தொடர்ச்​சியே இன்று கணினி அறி​வியல், வங்​கித்​துறை, செயற்கை நுண்​ணறி​வு, விண்​வெளித் தொழில்​நுட்​பம் உள்​ளிட்ட நவீன உலகின் பல்​வேறு துறை​களுக்கு அடித்​தள​மாக அமைந்​துள்​ளது.

டிஜிட்​டல் பொருளா​தா​ரம்: இன்று டிஜிட்​டல் பொருளா​தா​ரம் உலகின் மிகப்​பெரிய பொருளா​தார சக்​தி​களில் ஒன்​றாக உரு​வெடுத்​துள்​ளது. ஆனால், அந்த அடிப்​படை சிந்​தனையை உலக தொழில்​நுட்ப நிறு​வனங்​கள் பல லட்​சம் கோடி டாலர் மதிப்​புள்ள தொழிலாக மாற்​றிய​போதும், அதன் அறி​வியல் பாரம்​பரி​யத்​தின் உரிமை​யாள​ராக இந்​தியா பொருளா​தார பலன் பெற​வில்​லை.

சுஸ்​ருதரின் அறு​வைச் சிகிச்சை அறி​வு, இரண்​டா​யிரம் ஆண்​டு​களுக்கு முன்​பே, குறிப்​பாக மூக்கு மறுசீரமைப்​பு, இந்​திய மருத்​துவ அறி​வின் தொன்​மை​யை​யும் மேம்​பாட்​டை​யும் வெளிப்​படுத்​துகிறது. இன்று மருத்​து​வ​மும் அழகியல் அறு​வைச் சிகிச்​சை​யும் பல பில்​லியன் டாலர் உலகளா​விய சந்​தைகளாக வளர்ந்​துள்​ளன.

யோகா இந்​தி​யா​வின் மற்​றொரு உலகப் பரிசு. 2014-ல் ஐ.நா. ஜூன் 21-ஐ சர்​வ​தேச யோகா தின​மாக அறி​வித்​தது. இன்று யோகா உலக வாழ்க்கை முறை​யின் ஒரு பகு​தி​யாகி​விட்​டது. ஆனால் அதன் உலகளா​விய வணிக மதிப்​பில் இந்​தியா பெறும் பங்​கு, அதன் நாகரி​கப் பங்​களிப்​புக்கு இணை​யாக உள்​ள​தா?

இது அறி​வில் மட்​டுமல்ல; நமது இயற்​கைச் செல்​வங்​களின் வரலாறும் இதே கேள்​வியை எழுப்​பு​கிறது. இந்​தி​யா​வில் இருந்து பிரிட்​டிஷ் ஆட்​சிக்​காலத்​தில் கோல்​கொண்டா சுரங்​கங்களில் இருந்து கிடைத்த கோஹினூர் உலகின் மிகப் புகழ்​பெற்ற வைரங்​களில் ஒன்​று. இன்று பிரிட்​டிஷ் அரச கிரீடத்​தின் ஒரு மதிப்​புமிக்க சொத்​தாக உள்​ளது. அதற்கு அதி​காரப்​பூர்​வ​மான இன்​றைய சந்தை விலை இல்​லை; அது விற்​பனைக்​குரிய சந்​தைச் சொத்து அல்ல.

பல்​வேறு மதிப்​பீடு​கள் கூறப்​பட்​டாலும், அதன் வரலாற்று மற்​றும் பண்​பாட்டு மதிப்பை பணத்​தில் அளவிட முடி​யாது. இது ஒரு வைரத்​தின் இழப்பு மட்​டுமல்ல; இந்​தி​யாவின் வர்த்தக ஆற்​றல் எவ்​வாறு காலனித்​து​வத்​தின் மூலம் உலகிற்கு மாற்​றப்​பட்​டது என்​ப​தற்​கான அடை​யாள​மாகும்.

அறி​வு​சார் சொத்​துரிமை: மஞ்​சள், வேம்​பு, பாஸ்​மதி அரிசி போன்ற நமது பாரம்​பரிய அறி​வு​களுக்​குக் கூட வெளி​நாடு​களில் காப்​புரிமை கோரப்​பட்ட வரலாறு உள்​ளது. இந்​தி​யா​வின் பாரம்​பரிய அறிவை ஆவணப்​படுத்தி பாது​காக்க Traditional Knowledge Digital Library (TKDL) உரு​வாக்​கப்​பட்​டது. இது அறி​வு​சார் சொத்​துரிமை​யின் முக்​கி​யத்​து​வத்தை நமக்கு உணர்த்​திய அனுபவத்​தின் விளைவு.

பெரும்​பாலான சந்​தைகள் வேறு நாடு​களின் கைகளுக்​குச் சென்​றன. இதில்​தான் நாம் கற்​றுக்​கொள்ள வேண்​டிய மிகப்​பெரிய பாடம் இருக்​கிறது.

அறிவை உரு​வாக்​கு​வது முதல் வெற்​றி. அதை ஆவணப்​படுத்​து​வது இரண்​டாவது வெற்​றி. காப்​புரிமை பெறுவது மூன்​றாவது வெற்​றி. அதை தொழிலாக​வும் உலகச்சந்தையாக​வும் மாற்​று​வதே முழு​மை​யான வெற்​றி.

உலகின் முன்​னணி நிறு​வனங்​களின் மதிப்​பில் இன்று நிலம், கட்​டடம், இயந்​திரங்​களை விட அறி​வு​சார் சொத்​துரிமை, காப்​புரிமை, தொழில்நுட்​பம், பிராண்ட் ஆகிய​வற்​றின் பங்கு அதி​கரித்​துள்​ளது. இந்த மாற்​றத்தை இந்​தியா முழு​மை​யாகப் பயன்​படுத்த வேண்​டும்.

பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​தும் “ஜெய் அனுசந்​தான்” (Jai Anusandhan) இந்​தப் புதிய சிந்​தனை​யின் அடிப்​படை​யாக அமைய வேண்​டும். ஆய்​வகத்​தில் பிறக்​கும் கண்​டு​பிடிப்பு காப்​புரிமை​யாக​வும், காப்​புரிமை தொழிலாக​வும், தொழில் உலகச் சந்​தை​யாக​வும், அந்​தச் சந்தை இந்​தி​யா​வின் தேசிய செல்​வ​மாக​வும் மாற வேண்​டும்.

“உள்​ளூர் தயாரிப்​பு​களுக்கு ஆதர​வு” (Vocal for Local) என்பது இந்​தி​யப் பொருளை வாங்​கு​வது மட்​டுமல்ல; இந்​திய அறிவை​யும் இந்​தி​யப் பெயருடன் உலகச் சந்​தை​யில் மதிப்​பாக்​கு​வ​தாக இருக்க வேண்​டும்.

காலத்​தின் கட்​டளை: “வசுதைவ குடும்​பகம்” என்று உலகிற்கு வாழ்​வியல் தத்​து​வத்தை வழங்​கிய இந்​தி​யா, “அறிவே செல்​வம்” என்ற உண்​மை​யை​யும் உலகிற்கு உணர்த்​தி​யது. ஆனால் அறிவை பொருளா​தார ஆற்​றலாக மாற்​றும் கலையை நாம் தாமத​மாகக் கற்​றோம்.

சுதந்​திரத்​தின் 80-வது ஆண்டில் நாம் எடுத்​துக்​கொள்ள வேண்​டிய உறுதி இது​வாக இருக்​கட்​டும்: உலகிற்கு அறிவை வழங்​கிய இந்​தி​யா, இனி அந்த அறி​வின் பொருளா​தா​ரத்​தை​யும்​ வழிநடத்​த வேண்​டும்​. அது​வே வளர்ந்​த பாரத்​ 2047 நோக்​கி இந்​தி​யா மேற்​கொள்​ளும்​ உண்​மை​யான அறிவுப்​ புரட்சி​யாக அமையும்​.

- கட்டுரையாளர், பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் மாநில தலைவர்

SCROLL FOR NEXT