சிறப்புக் கட்டுரைகள்

புனைப்பெயரை மாற்றச்​சொன்ன கோபாலி! | அஞ்சலி

தஞ்சாவூர் கவிராயர்

எழு​பதுகளில் நான் ‘கோ​பாலி’ என்ற புனைப்​பெயரில் கதைகள் எழு​திக்​கொண்​டிருந்​தேன். தஞ்சை இலக்​கிய நண்​பர்​கள் என்னை ‘கோ​பாலி’ என்​று​தான் குறிப்​பிடு​வார்​கள்.

எண்​பதுகளின் தொடக்​கத்​தில் நான் தமிழ்ப் பல்​கலைக்​கழகத்​தில் பணிபுரிந்​த​போது ஒரு​நாள் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்​தது. அழைத்​தவர் ஒரு விசித்​திர​மான வேண்​டு​கோளை முன்​வைத்​தார்.

“சார், உங்​கள் பெயர் கோ​பாலி​தானே?”

“ஆமாம்.”

“உங்​கள் புனைப்​பெயரை மாற்​றிக்​கொள்ள முடி​யு​மா?”

“ஏன்?”

“சார் என் பெயர் எஸ்​.கோ​பாலி. ஒரு கலை விமர்​சக​ராக ஆங்​கில ஏடு​களில் என்னை அறிந்​திருக்​கலாம்.”

“உங்​களைத் தெரி​யும் சார்... சொல்​லுங்​கள்.”

“நடிப்​பு, திரைத்​துறை, விமர்​சனம் இவை​தான் நான் செயல்​படும் தளங்​கள்.

கதைகள் எழுது​வது கிடை​யாது. நீங்​கள் ‘கோ​பாலி’ என்ற பெயரில் எழு​திய கதைகளைப் படித்​து​விட்டு அடடே! நீ கதை எல்​லாம் எழுது​வா​யா?

சொல்​லவே இல்​லை​யே! என்று நண்​பர்​கள் கேட்க ஆரம்​பித்து விட்​டார்​கள். பேசாமல் நீங்​கள் எனக்​காக உங்​கள் பெயரை மாற்​றிக்​கொள்ள முடி​யு​மா?”

“எனக்​குப் பிடித்​த​தால்​தான் ‘கோ​பாலி’ என்ற பெயரில் எழுதுகிறேன். தி.ஜானகி​ராமனின் மரப்​பசு நாவலில் கோ​பாலி என்று ஒரு கதா​பாத்​திரம்​... எனக்கு மிக​வும் பிடித்​து​விட்​ட​தால் அதையே என் புனைப்​பெய​ராக வைத்​துக் கொண்​டு​விட்​டேன்.”

“இப்​போது குழப்​பம் வந்​து​விட்​டதே! ப்ளீஸ்.. வேறு​பெயரை வைத்​துக்​கொள்​ளுங்​கள்!”

“யோசிக்​கணும்.”

“யோசிக்​காதீங்க கோ​பாலி”

“பாத்​தீங்​களா? நீங்​களே கோ​பாலின்னு சொல்​றீங்​க.’’

“சா​ரி.. சாரி! நான் வேணும்னா உங்​களுக்கு நல்ல புனைப்​பெயரா பார்த்து சொல்​லட்​டு​மா?”

“குழந்​தைகளுக்​குப் பெயர் வைக்​கிற மாதிரி அல்​லவா இருக்​கிறது! என் ஜாதகத்​தைக்​கூட கேட்​பீர்​கள்​போல இருக்​கிறதே!”

“நிஜ​மாத்​தான் சொல்​லுகிறேன். கொஞ்​ச​காலம் ‘கோ​பாலி’ என்ற பெயரில் எழு​தாதீர்​கள்.. அப்​புறம் எழுதலாம்!”

“ஏன் அப்​படி?”

“எனக்​குப் பிறகு நீங்​கள்

‘கோ​பாலி’ என்ற புனைப்​பெயரில் எழுதலாமே!”

“சார் வாட்யூ மீன்?”

“எஸ்​... நீங்​கள் இளைஞர்​... சாதிக்க வயது இருக்​கிறது... நான் அப்​படி அல்​ல!”

எனக்​குத் தூக்​கி​வாரிப்​போட்​டது. அவர் சொன்​ன​விதம் மனதைத் தொட்​டது.

“சார் இப்​படி எல்​லாம் பேசாதீர்​கள்! நான் இனிமேல் கோ​பாலி என்ற பெயரில் எழுத​மாட்​டேன்!”

“ரொம்ப தேங்க்​ஸ்.”

இந்த உரை​யாடலுக்​குப் பின்​னர் அவர் தமிழ்ப் பல்​கலைக்​கழகத்​துக்கு தொலைபேசி​யில் பேசும்​போதெல்​லாம் “ஹலோ கோ​பாலி!” என்​பார். சின்​ன​தாக சிரிப்​பு.

அவர் ஃபிலிம் இன்​ஸ்​டிடியூட்​டில் பணிபுரிவதும், இயக்​குநர் கே.​பாலச்​சந்​தரிடம் ரஜினி​காந்தை அவர்​தான் அறி​முகப்​படுத்​தி​னார் என்​பதும்,

பல திரைப்பட முன்​னணி கதா​நாயகர்​கள், அவரை குரு ஸ்தானத்​தில் வைத்துப் போற்​று​வதும் பின்​னர் தெரிய​வந்​தது.

அதற்​குப் பிறகு ‘கோ​பாலி’ என்ற பெயரையே நான் மறந்​து​விட்​டேன்.எனக்கு ‘தஞ்​சாவூர்க்​க​வி​ராயர்’ என்ற பெயரை தஞ்சை ப்ர​காஷ்​தான் சூட்டி இலக்​கிய ஞானஸ்​நானம் செய்​து​வைத்​தார். ஆனால், நண்​பர்​கள் கோ​பாலி என்ற பெயரில் கூப்​பிடு​வதை என்​னால் தடுக்​க​முடிய​வில்​லை. நான் கோ​பாலி என்ற பெயரில் எழுது​வதை விட்​டு​விட்​டேன்.

இப்​போது எஸ்​.கோ​பாலி மறைந்​து​விட்​டார். கோ​பாலி என்ற பெயரில் நான் எழுது​வதை அவர் ஆட்​சேபிக்​கப்போவ​தில்​லை. ஆனாலும், ‘கோ​பாலி’ என்ற பெயரில் இனி ஒருபோதும் எழுத மாட்​டேன். இருந்​தா​லும் மறைந்​தா​லும், கலை உலகில் ஒரே கோ​பாலி​தான் உண்​டு.

அது நீங்​கள்​ மட்​டும்​தான்​!

கோ​பாலி சார்​! போய்​ ​வாருங்​கள்​!

SCROLL FOR NEXT