சிறப்புக் கட்டுரைகள்

இஸ்ரேலுக்குப் பெருந்தன்மை தேவை

செய்திப்பிரிவு

காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ராணுவத்தில் சிலரும் அப்பாவிப் பொது மக்களில் பலரும் விலையாகத் தங்களுடைய உயிரைத் தர நேர்ந்தது.

இஸ்ரேலிய மக்களையும் நிலப் பகுதியையும் பாதுகாக்க ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளால் இதுவரை மொத்தம் 300-க்கும் மேற்பட்டவர்களும் தரைப் பகுதியில் எடுத்த நடவடிக்கைகளில் 60-க்கு மேற்பட்டோரும் இறந்துவிட்டனர். ஆயிரக் கணக்கானவர்கள் தங்களுடைய வீடுகளைவிட்டு வடக்கு நோக்கிக் குடிபெயர்ந்துவருகின்றனர். சர்வதேசச் சமூகம் கடுமையாக நெருக்குதல் தரவில்லை என்பதால், பொதுமக்கள் கொல்லப்படுவதை அது சரி என்கிறது என்று கருதிவிடக் கூடாது. ஐரோப்பாவின் கண்ணுறக்கமும் அமெரிக்காவின் தலையசைப்பும்கூட, காஸா பகுதியை இஸ்ரேல் ராணுவம் கால வரம்பின்றி ஆக்கிரமித்துக்கொள்வதற்கான ஒப்புதல் என்று கருதிவிடக் கூடாது. எப்போது காஸாவில் கால் எடுத்து வைத்தோமோ அப்போதே அங்கு வாழும் மக்களின் பாதுகாப்புக்கும் நாம்தான் பொறுப்பு.

இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, எதிரிகள் அனைவரும் சரணடைந்து விட்டார்கள் என்றபோதும், அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தனது நாட்டுப் படையினருக்கு இட்ட கட்டளையே, “வெற்றி கிடைத்திருக்கும் வேளையில் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள்” என்பதுதான். எனவே, பல ஆண்டுகளாகத் துயரங்களில் ஆழ்ந்திருக்கும் 18 லட்சம் மக்களின் துயரங்களைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காஸா மக்களைப் பெருந்தன்மையாக நடத்துவதன்மூலம் அடுத்த சுற்று அவர்களோடு மோதுவதைத் தவிர்க்கலாம். அந்த மக்களின் துயரங்களைக் களைய துணைநிற்பதன் மூலமே அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று சமாதானத்தைக் கொண்டுவர முடியும்.

SCROLL FOR NEXT