சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள்: விடுதலை குறித்து அன்றைய தலைவர்கள் 

முகமது ஹுசைன்

நாளை முதல் நாம் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவோம். ஆனால், இன்று நள்ளிரவில் இந்தியா எனும் நாடும் பிரிவினைக்கு உள்ளாக்கப்படுகிறது. நாளை மகிழ்ச்சியான நாள் என்றாலும்கூட, ஒரு வகையில் அது நமக்குத் துக்க நாளே. இந்த விடுதலையும் பிரிவினையும் நம் மீது பெரும் பொறுப்பைச் சுமத்தும். அந்தப் பொறுப்பைத் தாங்கும் ஆற்றலை அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்திப்போம்.

- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

சுதந்திரம் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த சுதந்திரம் நம் மீது அதிக பொறுப்புகளைச் சுமத்தியுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் பெற்றதன் மூலம், தவறு நடந்தால் ஆங்கிலேயர்களைக் குற்றம்சாட்டும் சாத்தியத்தை நாம் இழந்துவிட்டோம்.

இனிமேல் தவறு நடந்தால், நம்மைத் தவிர வேறு யாரையும் நாம் குற்றம் சொல்லிக்கொள்ள முடியாது. தவறுகள் நடக்கும் ஆபத்து அதிகம் உள்ளது. காலம் வேகமாக மாறுகிறது.

- பாபாசாகேப் பி.ஆர். அம்பேத்கர்

நம் வாழ்வின் லட்சியம் நிறைவேறுவதையும், தேசத்தின் சுதந்திரப் போராட்டத்திற்கு மகுடம் சூட்டிய வெற்றியில் பங்கேற்பதையும் காணும்போது, இந்த மகத்தான விடுதலைக்காகத் தியாகம் செய்தவர் களையும், அவர்களின் போராட்டங்களையும் நினைவுகூர்வதே இன்று நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

சுதந்திரம் கொண்டு வரும் மகிழ்ச்சியில் திளைத்தபடி அவர்களின் நினைவை நாம் போற்றுவோம்.

- சர்தார் வல்லபபாய் படேல்

சுதந்திர தருணத்தில் ஆழமான நேர்மை கொண்ட உள்நோக்கம், பேச்சில் அதிக தைரியம், செயலில் அக்கறை ஆகியவற்றை நாங்கள் விரும்புகிறோம்.

- கவிக்குயில் சரோஜினி நாயுடு

தொகுப்பு: ஹுசைன்

SCROLL FOR NEXT