* இயற்கை வேளாண்மைக்கென தமிழகத்தில் தனியான கொள்கை வகுக்கப்பட வேண்டும். இயற்கை வேளாண்மைக்கு என்று தனியான துறையும் தொடங்க வேண்டும்.
* ரசாயன உரங்களால் மண்வளம் கெட்டுவிட்டது. மண்வளத்தை மீட்டெடுக்கப் பசுந்தாள் உரச் செடிகளின் விதைகளைப் பெருமளவில் இலவசமாக வழங்க வேண்டும்.
* இயற்கை வேளாண்மைக்கான உரத்தை விவசாயிகளே தயாரிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான மானியத்தை மாநில அரசு ரொக்கமாக வழங்க வேண்டும்.
* இயற்கை விளைபொருட்களை முதல்கட்டமாக அரசு மருத்துவமனைகள், விடுதிகள், அங்கன்வாடிகளின் பயன்பாட்டுக்காக அரசே கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்.
* இயற்கை இடர்பாடுகளைத் தாங்கி வளரக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து, அவற்றைச் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
* ஒரு விவசாயி ஒரு நாட்டு பசுமாடு வைத்திருந்தால், அவரால் ஒரு ஆண்டுக்கு 32 ஏக்கருக்குத் தேவையான இயற்கை உரம் தயாரிக்க முடியும். பால் மட்டுமல்லாது கோமியம், சாணம் ஆகியவை வேளாண்மைக்குத் தேவைப்படுவதால் கால்நடை வளர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும்.