சிறப்புக் கட்டுரைகள்

ஜூன் 25, 1900- மவுன்ட் பேட்டன் பிறந்த நாள்

சரித்திரன்

இங்கிலாந்தின் பிடியில் இந்தியா இருந்தபோது, இந்தியாவை நிர்வாகம் செய்வதற்காக இங்கி லாந்தால் அனுப்பப்படுபவர் வைஸ்ராய் எனப்பட்டார். இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுன்ட் பேட்டன் ( 1900-1979) பிறந்த நாள் இன்று.

மவுன்ட் பேட்டன் இங்கிலாந்தின் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். 13 வயதிலேயே இங்கிலாந்து ராணுவத்தில் சேர்ந்து, பிறகு பல போர்களில் பங் கெடுத்தார், இரண்டு உலகப் போர்கள் உட்பட.

1947-ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்த போது, அவர் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி ஏற்றார். இந்தியத் தலைவர் களோடும் அரச குடும்பங்களோடும் அவருக்கு இருந்த தொடர்புகள் சுதந்திர இந்தியாவை உருவாக்க உதவின. சுதந்திரம் அடையும்போது பிரிக்கப்படாமல் இந்தியா ஒன்றாக இருக்க வேண்டும் என அவரும் முயன்றார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையைச் செய்வதாக இருந்தால் உடனேயே செய்தாக வேண்டும். படிப்படியாகச் செய்வோம் என்று நினைத்தால் ஒரு உள்நாட்டுப் போரில் இந்தியா சிக்கிவிடும் என அவர் கருதினார்.

நாட்டின் பிரிவினையால் சுமார் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக் கும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர்.அப்போது ஏற்பட்ட கலவரங்களால் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான மக்களின் இடப்பெயர்வைச் சமாளிப்பதற்கான எந்த ஒரு முன்னேற்பாட்டையும் செய்ய இயலாத நிலையில்தான் புதிதாக பிறந்த நாடுகள் இருந்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் 10 மாதங்கள் முதல் கவர்னர் ஜெனரலாக மவுன்ட் பேட்டன் நீடித் தார். அதன் பிறகு இங்கிலாந்து சென்ற அவர், பாது காப்பு அமைச்சராகவும் இங்கிலாந்தின் வைட்டு தீவின் ஆளுநராகவும் இருந்து ஓய்வுபெற்றார்.

தனது 79-வது வயதில் அயர்லாந்தில் படகுச் சவாரி செய்தபோது அயர்லாந்து விடுதலைப் போராட்ட இயக்கத்தினர் வைத்த குண்டுவெடித்து மவுன்ட் பேட்டன் இறந்தார்.

SCROLL FOR NEXT