தற்போது மின்னணு இயந்திரத்தின் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாக்குச் சீட்டில் வாக்களித்தார்கள். ஒரே வாக்குச் சீட்டில் எல்லா வேட்பாளர்களின் பெயர்களும் அவற்றுக்கு நேராக அவர்களின் சின்னங்களும் இருக்கும்.
வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு முத்திரை இட்டு ஒரு பெட்டியில் போட்டு விடுவார்கள். ஆரம்பத்தில் இப்படி இல்லை. 1952 தேர்தலின்போது ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு பெட்டி. அதன் மீது அவருடைய சின்னம் ஒட்டப்பட்டிருக்கும். வாக்காளர் தனக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டில் முத்திரையிட்டு, தனக்கு விருப்பமான பெட்டியில் போடுவார். எவ்வளவு வேட்பாளர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும்.