*
கடலூர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, ஸ்டவ், மளிகைப் பொருட்கள் என பல்வேறு நிவாரண உதவிகளை தமிழகம் முழுவதும் இருந்து ‘தி இந்து’ வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
திருநெல்வேலி:
திருநெல்வேலி வண்ணார்பேட்டை பெஸ்ட் கிளீனிங் பவுடர் நிறுவனம் சார்பில் எஸ்.சுடலை, அரசு ஈஸ்வரன் ஆகியோர் 20 பேர் உதவியுடன் 32 ஸ்டவ், 20 லுங்கிகளை வழங்கினர். நாங்குநேரி வாசகர் ஆண்டாள், திருநெல்வேலி ரயில்வே மருத்துவமனை டாக்டர் சுகுமார், பாளையங்கோட்டை கிளாசிக் டெக்கரேட்டர் எஸ்.ஹரிராஜா 11 ஸ்டவ், போர்வை, பாய் வழங்கியுள்ளனர்.
மதுரை:
பழநி கிளை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள், காரைக்குடி ரோட்டரி சங்கம், சிவகங்கை தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்கள், சென்னை மென்ச்சர் ராம் புரோட்டா ஸ்டால் நண்பர்கள், ஹமீதியா ஸ்டோர், சரவணன், குமார், அடைக்கப்பன், சேகர், பாலாஜி, ராமலிங்கம், கோபிநாத், ரங்கராஜன், மதுரை ராம் மருத்துவமனை மற்றும் வாசகர்கள் மீனாம்பிகா, மாரியப்பன், சந்திரசேகரன், தேனி அகிலா பாத்திரக்கடை, திண்டுக்கல் சுப்பிரமணியன் ஆகியோர் ஸ்டவ், பாய், போர்வைகள் வழங்கினர்.
வேலூர்:
சித்தூரில் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணிபுரியும் போச்சம்பள்ளி நாகராஜன் 10 போர்வை, 15 பாய் வழங்கினார். வேலூரை சேர்ந்த ஆனந்தன், சி.ஏ.கிருபாகரன், துளசிராமன், குணசீலன் பாய், போர்வை, பெட்ஷீட் வழங்கினர். ரத்தினகிரி டாக்டர் வி.இளங்கோவன் 10 ஸ்டவ், வாலாஜா ராஜ்குபேர், திருவண்ணாமலை கே.வேணுகோபால் பாய், போர்வை, ஸ்டவ்களை அனுப்பினர். கேபிஎன் பார்சல் சர்வீஸ் ராணிப்பேட்டை கிளை உரிமையாளர் லட்சுமிபதி 25 கிலோ அரிசி மூட்டையை அனுப்பியுள்ளார்.
திருச்சி:
ஸ்ரீவாரி பைனான்ஸ் நிறுவனம் ஒரு பண்டல் போர்வைகள், ஸ்டவ், கனரா வங்கி ஊழியர்கள் 20 ஸ்டவ், அருண்குமார், தயானேஸ்வரன், சார்லஸ், சுசீலா, பிலோமின் ராஜ், ரங்கம் வெங்கட்கணபதி, ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமார், ரத்தினசபாபதி, கண்ணன் பாய், போர்வை, ஸ்டவ்கள், ஆடைகள் மற்றும் பொருட்களை அனுப்பினர்.
கரூரில் இருந்து தெற்கு காந்திகிராமம் எம்ஜிஆர் நகர் மக்கள் 5 ஸ்டவ், கரூரை சேர்ந்த சூர்யா, மணி 50 பாய்கள் அனுப்பினர்.
கும்பகோணத்தில் இருந்து கிருஷ்ணமூர்த்தி, தஞ்சாவூர் எல்ஐசி ஊழியர் அறிவழகி ஸ்டவ்களை அனுப்பினர். மயிலாடுதுறை கேபிஎன் பார்சல் சர்வீஸ் சார்பில் 25 கிலோ அரிசி, பாலு, தனலட்சுமி சார்பில் போர்வைகள், பாய்கள், ஸ்டவ் வழங்கப்பட்டுள்ளன.
கோவை:
ஒய்ஸ்மேன் கிளப் ஆப் கோவை கிரீன் சிட்டி சார்பில் தலைவர் ஜி.சுப்ரமணியம், செயலாளர் பி.தட்சணாமூர்த்தி ரூ.13 ஆயிரம் மதிப்பில் 60 போர்வைகளை அனுப்பினர். கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த எஸ்.உமேஷ் ரூ.2,900 மதிப்பில் 10 அடுப்புகளை வாங்கி அனுப்பினார். கோவை கணுவாய் ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் 50 பாய், 50 போர்வை அனுப்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் வாசகர் சுபத்ரா 2 போர்வை, ஒரு சுடிதார் வழங்கினார். என்.சக்திவேல், கே.ஆர்.முத்துக்குமார சாமி தலா 2 ஸ்டவ் அனுப்பினர். திருப்பூர் மணிப்பால் ஸ்டோர்ஸை சேர்ந்த பி.தங்கமணி 10 ஸ்டவ், ஜான்சி 2 ஸ்டவ் அனுப்பினர்.
சேலம்:
சேலம் அழகாபுரத்தை சேர்ந்த சாவித்திரி, கோவையை சேர்ந்த பிரதீப் 30 செட் பேன்ட், சட்டை, 22 கம்பளி போர்வை அளித்தனர். அழகாபுரம் பொறியியல் மாணவி பிரீத்தி, சின்னதிருப்பதி அரசு பள்ளி ஆசிரியை சசிகலாதேவி பாய், போர்வைகளை அனுப்பினர்.
ஈரோடு:
ஈரோடு மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் 100 போர்வை வழங்கினர். ஈரோடு இந்தியா டீசல்ஹவுஸ் சார்பில் 10 மண்ணெண்ணெய் ஸ்டவ், ஈரோடு குணசேகரன், விநாயகா வித்யாபவன் பள்ளி நிர்வாகத்தினர், நடராஜன் ஆகியோர் பாய்களையும், சிவகிரி சேதுபதி - தங்கமணி தம்பதியர் போர்வை மற்றும் துணி வகைகளையும் அனுப்பினர்.
வாசுகி, எஸ்.கே.மணிகண்டன், விமலாதேவி, ராகவேந்திரா மெடிக்கல்ஸ், சிஸ்டம் ரேடியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் பாய்கள், போர்வைகள், ஸ்டவ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தருமபுரி:
தருமபுரி காந்தி நகர் வாசகர் சாந்தகுமார் 2 ஸ்டவ் அனுப்பினார்.
நாமக்கல்:
ஆனந்தகிருஷ்ணன், காளிதாஸ், பரமத்திவேலூர் செந்தில்குமார் ஸ்டவ், பாய், போர்வைகளை வழங்கினர்.
கிருஷ்ணகிரி:
ஓசூர் அறம் இலக்கிய அமைப்பு, அறக்கட் டளை சார்பில் கிருஷ்ணன், ராசு, வீரமுத்து, சிவந்தி அருணாசலம், மணிமேகலை ராஜன், சரவணன்,காமராசு ஆகியோர் 16 ஸ்ட்வ், 100 பாய், 50 போர்வை, 300 பிஸ்கட் பாக்கெட் என மொத்தம் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அனுப்பினர். கிருஷ்ணகிரி ஆசிரியர்கள் சுடலைமுத்து, நரசிம்மன், மனோன்மணி, தனசீலன், கிருஷ்ணன் ஸ்டவ்களை அனுப்பினர்.
சென்னை:
சென்னையை சேர்ந்த சோமசுந்தரம், காஞ்சன மாலா, அஸ்வின், விக்ரம் சேகர், யோதிகா, ஜவஹர், அஸ்ரப், வீரப்பன், ராஜகோபாலன், ஏ.கே.ராஜாராம், எஸ்.வி.முருகப்பன், செல்வராஜன், சங்கமித்ரா ஸ்டவ்கள், போர்வைகள், பாய்கள் உட்பட ஏராளமான பொருட்களை வழங்கினர்.
புதுவை:
புதுவை ரெட்டியார்பாளையம் அரசு ஊழியர் மதிவாணன் 3 ஸ்டவ் கொடுத்துள்ளார்.
வாசகர்கள் அனுப்பிவரும் நிவாரணப் பொருட்கள் கடந்த 21-ம் தேதி முதல், பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை 19 கிராமங்களில் 3,137 குடும்பத்தினரிடம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. உதவிகள் தொடரட்டும்.. இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்! - ஆசிரியர் |