சிறப்புக் கட்டுரைகள்

பிபிஇ உடை கொண்டுவரும் தோல் வியாதி

செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளைக் கவனிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களெல்லாம் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டியது அவசியம். இந்த உபகரணங்களை ஒரு நாளில் 8 முதல்12 மணி நேரம் வரை அணிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. விளைவாக, படு மோசமான தோல் வியாதிகளை அவர்கள் எதிர்கொள்வதாகச் சொல்கிறது சீன ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வு. 161 மருத்துவமனைகளில் பணியாற்றிய 4,308 மருத்துவப் பணியாளர்களைப் பரிசோதித்ததில் 42.8% பேருக்குத் தீவிர தோல் பிரச்சினை இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. சிகிச்சை எடுக்காமல் விட்டுவிட்டதால் இப்போது அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவைப் பரிசீலித்து நம் நாட்டில் கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்குத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT