சிறப்புக் கட்டுரைகள்

நடந்துசெல்லும் தூரத்தில் அரசு மருத்துவமனைகள்

செய்திப்பிரிவு

டெல்லியில் 2015-ல் தொடங்கப்பட்ட ‘மொஹல்லா கிளினிக்’ என்னும் அருகமை மருத்துவமனைகளின் எண்ணிக்கை 187ஆக அதிகரித்திருக்கிறது. இங்கு மருத்துவ ஆலோசனை, மருந்து-மாத்திரை, மருத்துவ சோதனை என்று அனைத்துமே இலவசம். சாதாரண சளி,காய்ச்சல் தொடங்கி நீரிழிவு, இதய நோய்கள் வரைக்கும் மருந்து-மாத்திரைகள் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன. டெல்லி மாநகரின் குடிசைப் பகுதிகளுக்கு அருகிலேயே இருப்பதால் அங்கு வசிக்கும் ஏழை மக்கள் அதிக போக்குவரத்துச் செலவு இல்லாமல் வீட்டிலிருந்து நடந்தே சென்று சிகிச்சை பெறுகின்றனர்.நீண்ட நேர காத்திருப்புக்கும் அவசியம் இல்லை. வீட்டு வேலை செய்வோர், ரிக்‌ஷா, ஆட்டோ ஓட்டுனர்கள்,கட்டிட வேலை, சிறு வியாபாரம், கூலி வேலைசெய்கிறவர்களுக்கு இவை பெரிதும் கைகொடுக்கின்றன. இதைப் பயன்படுத்துவோரில் 49%பெண்கள். குழந்தைகளும் முதியவர்களும் எண்ணிக்கையில் அதிகம். இந்த மருத்துவமனைகளை ‘ஸ்ட்ரெயிட் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஊடகங்களெல்லாம் பாராட்டியுள்ளன. இந்த மருத்துவமனைகளை நேரில் வந்து பார்க்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்புவிடுத்திருக்கிறார் முதல்வர் கெஜ்ரிவால்.

SCROLL FOR NEXT