சிறப்புக் கட்டுரைகள்

360: பல் பிரச்சினையா? அலட்சியம் வேண்டாம்!

செய்திப்பிரிவு

இந்திய மக்கள்தொகையில் 66.7 கோடிப் பேர் ஏதாவதொரு வகையில் பல் தொடர்பான நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடக் குழந்தைகளில் பல் நோய்களுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 70%. வயது வந்தோரில் இந்த எண்ணிக்கை 90%. வாய்ப் புற்றுநோயில் உலகின் தலைநகராகவே திகழ்கிறது இந்தியா. அன்றாடம் 5 பேர் இறக்கின்றனர். லட்சத்தில் 20 இந்தியர்கள் வாய்ப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். இந்தியாவின் மொத்த புற்றுநோயாளிகளில் 30% பேர் வாய்ப் புற்றுநோயாளிகள்தான்! புகையிலை மெல்லுதல், புகைபிடித்தல், புகையிலை சேர்க்கப்பட்ட பான் மசாலாக்களைக் கீழ் உதட்டு மறைவில் திணித்து எப்போதும் மெல்லுதல் போன்றவற்றை வாய்ப் புற்றுநோய்க்கான முதல் காரணங்கள். இவற்றோடு பற்களையும் ஈறுகளையும் சுத்தமாகப் பராமரிக்காமல் இருப்பதாலும், பற்களில் ஏற்படும் காயங்களைப் புறக்கணிப்பதாலும்கூட வாய்ப் புற்றுநோய் வரலாம் என்கிறார்கள்.
 

SCROLL FOR NEXT