சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவுக்கு முன்னுள்ள வழி

செய்திப்பிரிவு

வெளிப்படையாக வகுப்புவாதப் பின்னணி உள்ள ஒரு அரசியல்வாதி, 'பொருளாதார அதிகாரமளித்தல் புத்துயிரூட்டல்' என்கிற வாக்குறுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்போது அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தியா, தனது புதிய பிரதமராக மோடியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. ஒரு பிரிவினரை ஒதுக்கிவைத்தும் எதேச்சாதிகாரமாகச் செயல்பட்டும்வந்த ஒருவரை இந்திய வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பதிருப்பது பிரச்சினைகளுக்கு இடம்தருவது.

இந்திய வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க போதிய மாற்று வேட்பாளர்கள் இல்லாததாலும், சட்டரீதியாக அவர் போட்டியிடத் தடை இல்லாததாலும், அவருடைய இந்த வெற்றிக்கு உண்டான அங்கீகாரத்தை மறுக்க முடியாததாகிவிட்டது.

அரசியலை மத அடிப்படையில் ஒரு சார்பாகக் கொண்டுசெல்லாமல், சரிந்துவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை உயர்த்துவது, நாட்டின் செல்வ வளத்தை மறுவிநியோகம் செய்வதில் உள்ள கோளாறுகளைச் சீர்செய்வது போன்றவற்றில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம்.

ஜனநாயகத்தை நோக்கிழு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் பாகிஸ்தானியர் கண்ணோட்டத்தில், இந்தியாவில் நிகழ்ந்துள்ள இந்த ஆட்சி மாற்றம் இப்போதைவிட எப்போதும் முக்கியமாக இருந்திருக்க முடியாது. பாகிஸ்தானில் உள்ள வலதுசாரி அரசு, இந்தியாவில் அமைந்துள்ள வலதுசாரி அரசுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடியும், இதற்கு முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தலைமையில் பாகிஸ்தானில் அரசு ஏற்பட்டபோது செய்ய முடிந்ததைப்போல. "1998-ல் ஆட்சி பறிக்கப்பட்டபோது எந்த இடத்தில் விட்டேனோ அந்த இடத்திலிருந்து தொடங்குவேன்" என்று நவாஸ் ஷெரீஃப் அறிவித்ததைச் செயல்படுத்த இப்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

குறுகியகால சாத்தியக்கூறுகளைக் கணக்கில் கொண்டு, நீண்டகாலத் தீர்வுகளுக்கு இரு நாடுகளும் முயற்சிக்க வேண்டும். எங்கு முன் னேற்றம் சாத்தியம், உண்மையில் சாதிக்கக்கூடியது எது என்று இப்போது எல்லோருக்கும் தெரியும். எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு முன்னதாக, எளிதில் இணங்கிச் செல்லக்கூடிய பிரச்சினைகளில் பேச்சுகளைத் தொடங்குவது நல்லது.

- DAWN

(பாகிஸ்தானின் DAWN பத்திரிகையில் வெளிவந்த தலையங்கத்தின் தமிழாக்கம் இது)

SCROLL FOR NEXT