புத்தகக் காட்சியில் புத்தக வேட்டை நிகழ்த்தும் வாசகர்கள், தவறவிடக் கூடாத சில அரங்குகள் இருக்கின்றன. அவற்றில் அரசு சார்ந்த வெளியீடுகள் பிரதானமானவை. பப்ளிகேஷன் டிவிஷனும் ஓர் அரங்கு வைத்திருக்கிறார்கள். தோண்டியெடுக் கப்படாத தங்கம் என்றுதான் சொல்ல வேண்டும், இந்த அரங்கில் வைத் திருக்கும் புத்தகங்களை.
2004-க்கு முன்பு வெளியிடப்பட்ட புத்தகங்கள் நம்பவே முடியாத அளவுக்குக் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. ‘காந்தி வாழ்க்கைச் சரித்திரம்’ என்றொரு வண்ணப் புத்தகம் ஒரு பொக்கிஷம். விலையோ ரூ. 100-தான். அதுவும் 50% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதே புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.
‘ஜவஹர்லால் நேரு வாழ்க்கைச் சரித்திரம்’ என்ற சித்திரப் புத்தத்தையும் தவற விட்டுவிடாதீர்கள். இதேபோல், என்.பி.டி., சாகித்ய அகாடமி, சென்னைப் பல்கலைக்கழக அரங்குகளுக்கும் சென்றுவாருங்கள், உங்கள் வீட்டில் அரிய புத்தகங்களின் நூலகம் ஒன்றை உருவாக்கிவிடலாம்.