ஒரு புத்தாண்டின் தொடக்கத்தில் நிற்கிறோம். ஒவ்வொரு புத்தாண்டின்போதும் ஒவ்வொருவருக்கும் சில திட்டங்கள் இருக்கும். அந்த ஆண்டின் முடிவில் அந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நிறைவேறாமல் இருப்பது வழக்கம். அதையெல்லாம் மீறி ஒரு சமூகத்தின் திட்டம் என்ன என்று பார்ப்பது அவசியமாகிறது. வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள், புதிய ஆண்டை எப்படிப் பார்க்கிறார்கள், இந்த ஆண்டில் சமூகம் செல்ல வேண்டிய திசை எது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளும் விதமாக இந்தத் தொகுப்பு.