இந்தப் புத்தகக் காட்சியில் தவற விடக் கூடாத அரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அரங்கு.
‘சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலரும் தந்தை பெரியாரும்’, ‘சேக்கிழாரும் இசைத் தமிழும்’, அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்’, ‘மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் பன்முக ஆளுமை’ என்பன போன்ற தமிழ் மொழி தொடர்பான பல முக்கியமான புத்தகங்கள் கிடைக்கின்றன,
அதுவும் மிகக் குறைந்த விலையில்! ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்று பலருக்கும் பலனளிக்கும் அரங்கம் இது. ரூ. 7,350 மதிப்புள்ள ‘செந்தமிழ் சொற்பிறப்பியல்’ எனும் 21 தொகுதிகள் கொண்ட புத்தகம் ரூ. 5,880-க்கு கிடைக்கிறது.
அரிய தகவல்கள் அடங்கிய ‘குழந்தைகள் களஞ்சியம்’ எனும் நூல் தொகுப்பு (10 தொகுதிகள்) ரூ. 960-க்குக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 1,200. அதேபோல், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கில் பெரும்பாலான புத்தகங்கள் 25% தள்ளுபடியில் கிடைக்கின்றன.
தமிழ் அரங்குகள்!