யாழ்ப்பாண அகராதி
(இரண்டு தொகுதிகள்)
சந்திரசேகரப் பண்டிதர்,
சரவணமுத்துப் பிள்ளை
விலை: ரூ. 620
வெளியீடு: தமிழ்மண் பதிப்பகம்
தமிழில் நாம் அறிந்த சொற்களைக் கணக்கிட முடியுமா? உண்மையில் லட்சக் கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான சொற்கள்புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டாலும் இலக்கியங்களிலும் நிகண்டுகள், அகராதிகள் போன்றவற்றிலும் அந்தச்சொற்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவை போன்ற 58,500 சொற்களுக்கான பொருளுடன் 1842-ல் வெளியான முக்கியமான அகராதிகளுள் ஒன்றுதான் ‘யாழ்ப்பாண அகராதி’. சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை ஆகிய இரண்டு இலங்கைத் தமிழறிஞர்கள் தொகுத்த இந்தப் புத்தகம், இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன. அந்த அகராதியைத் தேடிப்பிடித்து இப்போது தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.