சிறப்புக் கட்டுரைகள்

ரகுராம் ராஜன்

செய்திப்பிரிவு

ஏனென்றால், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகக் கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றதிலிருந்து இவர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள்தான் இன்னும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்திருக்கக் காரணமாக இருக்கின்றன.

ஏனென்றால், 2008-ல் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்தவர்.

ஏனென்றால், இவர் பொறுப்புக்கு வந்த சமயத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 68 ரூபாய் என்ற நிலையில் தள்ளாட்டத்தில் இருந்தது. தனது நடவடிக்கைகள் மூலமாக 62 ரூபாய்க்குக் கொண்டுவந்தார்.

ஏனென்றால், வட்டி விகிதத்தைக்குறைக்க வேண்டும் என்று பெருநிறுவனங்களும் மத்திய அரசும் வலியுறுத்திவந்த நிலையில், அத்தனை பேருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், “பணவீக்கம்தான் எனது முக்கியக் குறிக்கோள். அதைக் குறைப்பதுதான் முதல் வேலை” என்று கூறி வட்டி விகிதத்தை உயர்த்தினார்.

ஏனென்றால், நடப்புக் கணக்குப்பற்றாக்குறையை 56 பில்லியன் டாலர்களுக்குள் குறைக்க முடியும்என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார்.

"சேவைத் துறையின் நாடாகத்தான் இருக்கிறது இந்தியா, உற்பத்தித் துறையின் நாடாக இன்னும் உருவெடுக்கவில்லை. வளர்ச்சி நிலையில், இந்தியாவோடு சமநிலையில் இருக்கும் நாடுகள், மிகப் பெரிய உற்பத்தித் துறைகளைக் கொண்டிருக்கின்றன. இந்திய உற்பத்தித் துறைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது எது? அதை உடைக்க வேண்டும்!" - ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT