நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (1994) யோக சிகிச்சைக்காக கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்துக்குச் சென்றேன் கிருஷ்ணமாச்சாரியா, பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு, குறிப்பாக சமாதி பாதத்துக்கு எழுதிய உரையை நான் ஆழமாகப் பயின்றிருந்தேன்.
இருந்தாலும், மிகுந்த அவநம்பிக்கையுடனேயே யோக மந்தி ரத்துக்குச் சென்றேன். அப்போது கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தின் இயக்குநராகப் பேராசிரியர் ஈ.ஆர்.கோபால கிருஷ்ணன் இருந்தார். என்னுடைய உடலையும் மனத்தையும் முதலில் மருத்துவர்கள் சோதித்தனர். அதன் பிறகே கோபாலகிருஷ்ணன் என்னைப் பார்த்தார். அவர் எனக்கு வெகு குறைவான ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகளையே அளித்தார். என் மனமும் உடலும் இருந்த நிலைமைக்கு அந்த குறைவான பயிற்சிகள் போதும் என்று அறிவுறுத்தினார். ஒரு வாரப் பயிற்சியிலேயே என் முகமும் மனமும் மிகவும் பிரகாசமாகிவிட்டது. அந்த நாட்களில் என்னை மந்தைவெளி - மயிலாப்பூர் தெருவில் பார்த்த சாரு நிவேதிதா, இவ்வளவு தேஜஸ்வியாக இருக்கிறாயே என்று ஆச்சரியப்பட்டார். கோபாலகிருஷ்ணனோடு எனக்கு நட்பு நெருக்கமாக, அவர் எனக்கு காயத்ரி மந்திரத்தையும் சந்தியாவந்தனம் செய்யும் முறையையும் கற்பித்தார். கூடவே, வேத பாராயணம் செய்வதன் அடிப்படைகளையும் வாய்மொழி வாய்பாடுகளையும் எனக்குச் சொல்லித் தந்தார். நான் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
எல்லாமும் எல்லாருக்குமானது அல்ல
ஏழெட்டு வருடங்களில் சம்ஸ்கிருதத்தில் ஓரளவு பாண்டித்தியமும் ருத்ர பாராயணத்தில் தேர்ச்சியும் வந்துவிட்டது. வேத பாராயணமும் தியானமும் என்ற பொருளில் ஆங்கிலத்தில் சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். அந்தக் கட்டுரைகளை எழுதுவதற்காக விளக்கங்களைக் கேட்பதற்காக டி.கே.வி. தேசிகாச்சாரை 2000-ல் மூன்று நான்கு முறை சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு அளித்த விளக்கங்கள் நுட்மானவையாகவும் அதே சமயத்தில், செயல்முறையின்பாற்பட்டவையாகவும் இருந்தன. நான் கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரத்தில் பெற்ற சிகிச்சை, எப்படி தேசிகாச்சார் பதஞ்சலியை ஆழமாக உள்வாங்கியிருந்ததால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது எனவும் புரியவந்தது. தேசிகாச்சார் யோகத்தில் ஆன்மிகத்தையோ அல்லது கடவுள் நம்பிக்கையையோ வலியுறுத்தவில்லை. அவர் எல்லா ஆசனங்களும், எல்லா வகை மூச்சுப் பயிற்சிகளும் அனைத்து உடல்களுக்கும் உகந்தவை அல்ல என்பதை எடுத்துச் சொன்னார்.
யோகப் பயிற்சி ஒரு சுயபரிசோதனைக் கருவி
“நாம் பிறரைப் பற்றிய பார்வைகளை எப்படித் தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்” என்று விளக்கினார். தேசிகாச்சாருக்கு யோகப் பயிற்சி என்பது கவனத்தைக் குவித்தல், தியானம் செய்தல் என்பது மட்டுமன்று. அது சுயபரிசோதனைக்கான கருவி.
கேட்டலுமாகிய உணர்வுகள் மனதைக் கட்டுப்படுத்துகின்றன. உணர்வுகளைத் தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதன் மூலமே மனதை நாம் அறிய முடியும்” என்றார். சாதனா பாதம் அத்தியாயம் 2, 33-வது சூத்திரம் தொடர்பாக
யோக சூத்திரத்தில் சமாதி பாதம், அத்தியாயம் 1, 35-வது சூத்திரம் தொடர்பாக விளக்கமளித்த தேசிகாச்சார்,
“பார்த்தலும் “மனதைக் கற்பனைகளும் நினைவுகளும் ஆள்கின்றன. அவற்றிலிருந்து மனம் விடுபட்டு ஒரு பொருளைப் பொருளாகவே அறிவதற்கு மனம் வேறொரு பிரக்ஞையின் தளத்தை அடைய வேண்டும்” என்று தேசிகாச்சார் உரை எழுதினார். மனதுக்குள்ளாகவே மனதின் அத்தனை செயல் பாடுகளையும் கவனித்து, உணர்கிறவர் ஒருவர் இருப்பதாக கைவல்ய பாதம் அத்தியாயம் 4, 18-ம் சூத்திரத்துக்கு அவர் உரை எழுதியிருக்கிறார். மனதின் உள்ளார்ந்த கவனிப்பாளரையே நாராயணன் என்று நம்பினார் என்று கருத இடமிருக்கிறது.
ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் சுயபரிசோதனைக் கான வலுவை உடலுக்கும் மனதுக்கும் வழங்கு வதற்கான சாதனங்கள். விபூதி பாதம் அத்தியாயம் 3, 43-வது சூத்திரம் பற்றிக் குறிப்பிடுகையில்
கசடறக் கற்பித்த ஆசான்
தேசிகாச்சாரை என்னுடைய கட்டுரைகளுக்கான சந்திப் புகளின்போது, ஒரு முதிர்ந்த தத்துவ அறிஞரைச் சந்திப்பதான அனுபவத்தையே அடைந்தேன். 2000-க்குப் பிறகு, அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமையவில்லை. கிருஷ்ணமாச்சாரியா யோக மந்திரம், யோகாசனப் பயிற்சிகளோடு வேத பாராயணம், ஆயுர்வேத உணவு மற்றும் மருந்துகள் ஆகியவை பற்றிய ஆராய்ச்சியிலும் ஈடுபடும் நிறுவனம் என்று அறிந்திருக்கிறேன். யோகம் ஒரு கலை, அறிவியல், அறிவுச் செயல்பாடு, ஆன்ம சாதனம், தினசரி ஒழுக்கம் என்பதை தேசிக்காச்சாரை நாடிச் சென்றோருக்கெல்லாம் கசடறக் கற்பித்தார். தேசிகாச்சாரின் மறைவு, மரபான ஞானத்தின்படி வளமான வாழ்வினை வாழ்வதற்கான வழிமுறைகளைச் சொன்ன ஆசானின் மறைவு. அன்னாருக்கு என் அஞ்சலிகள்.
- எம்.டி.முத்துக்குமாரசாமி, எழுத்தாளர், தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தின் இயக்குநர், தொடர்புக்கு: mdmuthukumaraswamy@gmail.com.