சிறப்புக் கட்டுரைகள்

அருந்ததி பட்டாச்சார்யா

செய்திப்பிரிவு

ஏனென்றால், நாட்டின் மிகப் பெரிய வங்கியான 206 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவர்.

ஏனென்றால், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்காத நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டியைத் துணிச்சலாகக் குறைத்தவர்.

ஏனென்றால், துணை மேலாண் இயக்குநர் ஷியாமளா ஆச்சார்யாமீது லஞ்சக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பணியாளர்களுக்கான நிர்வாக விதிமுறைகளை அமல்படுத்தும் பணியில் தீவிரம் காட்டிவருகிறார்.

ஏனென்றால், பரிசு கொடுப்பதும் தவறு, அதைப் பெறுவதும் தவறு என வெளிப்படையாக அறிவித்தவர். ஊழியர் நலன் பேணும் தலைவர் இவர்.

ஏனென்றால், நிலையான அரசு அமைந்தால் மட்டுமே முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும், முதலீடுகளை ஈர்க்கத் தெளிவான கொள்கை அவசியம் என்றும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறுபவர்.

"‘காலாண்டிலிருந்து காலாண்டுவரை’என்ற கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டுமென்று நான் உறுதியாகக் கருதுகிறேன். குறுகிய காலத் திட்டங்களைத்தான் இந்தக் கலாச்சாரம் கொண்டுவருகிறது. 206 ஆண்டு பாரம்பரியமுள்ள என்னுடைய வங்கிக்காகக் குறுகிய காலத் திட்டங்கள் எதுவும் எனக்குத் தேவையில்லை" - அருந்ததி பட்டாச்சார்யா

SCROLL FOR NEXT