சிறப்புக் கட்டுரைகள்

என்ன சொல்கிறது மத்திய பட்ஜெட்?

செய்திப்பிரிவு

தனித்தன்மைகள் பல கொண்டது மத்திய அரசின் பட்ஜெட். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டும், மத்திய அரசின் பட்ஜெட்டும் இணைந்து வெளியாகியிருக்கிறது. திட்டச் செலவுகள், திட்டமில்லாத செலவுகள் என்ற பகுப்பு இல்லாத பட்ஜெட். கறுப்புப் பணம், கள்ளப் பணம் உள்ளிட்டவற்றை ஒழிப்பதற்காக என்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் என்ற பெரும் நடவடிக்கைக்குப் பிறகு வெளியாவதால் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது. டிஜிட்டல் பொருளாதாரம் எனும் பணமில்லாப் பரிவர்த்தனைகளை நோக்கிய அழுத்தம் தரப்படுகிற காலத்தில் வெளியாகியிருக்கிறது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறும் நேரத்தில், மத்திய அரசின் பட்ஜெட்டும் வெளியாவதால் பலவிதமாக விமர்சனங்களைச் சந்தித்தது. மத்திய பட்ஜெட் என்ன சொல்கிறது என்பதை வரைபடங்களில் காண்போம்.

SCROLL FOR NEXT