சிறப்புக் கட்டுரைகள்

அஹில்யா ரங்னேகர்: பெண் தலைவர்களின் முன்னோடி

வ.ரங்காசாரி

நெருக்கடிநிலை முடிவுக்கு வந்த பிறகு மக்களவைக்கு 1977-ல் நடந்த பொதுத் தேர்தலில் வட மத்திய மும்பை தொகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஹில்யா ரங்னேகர் (1922-2009). மார்க்சிஸ்ட் தலைவர் பி.டி.ரணதிவே, அவருடைய அண்ணன். 

1943-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானா அஹில்யா, சம்யுக்த மகாராஷ்டிர இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். பரேல் மகிளா சங்கத்தின் நிறுவனர்-உறுப்பினர். அதுவே பின்னாளில் ஜன்வாடி மகிளா சங்கமாக வளர்ந்தது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அங்கம் இது. அதன் தேசிய செயல்தலைவராக

2001-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 முதல் மும்பை மாநகராட்சி மன்ற உறுப்பினராக 19 ஆண்டுகளும், மகாராஷ்டிர மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழுச் செயலாளராக 1983-86-லும் பதவி வகித்தார். 1975-ல் இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பொதுக்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1979-ல் அதன் துணைத் தலைவரானார்.

விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்த அஹில்யா, ஏழைகள், தொழிலாளர்களுக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு அவர் சிறந்த முன்னோடி.

SCROLL FOR NEXT