ரா
ஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை குடியரசுத் தலைவரின் முடிவு என்று சொல்லிவிட முடியாது. அது மோடி அரசின் முடிவுதான்.
மத்திய அமைச்சரவையின் முடிவையே உள்துறை அமைச்சகமானது குடியரசுத் தலைவருக்கு அனுப்பு கிறது. அதையே குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிடுகிறது. இது சம்பந்தமாக நேரடியாக முடிவெடுக் கும் அதிகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கவில்லை. தமிழ்நாடு அரசுக்கு உண்மையில் எழுவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத் தைப் பயன்படுத்தி விடுவிக்கலாம். 2.12.2015-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதற்கு அடிப்படையாகிறது.
இதே நாட்டில்தான் தேசப்பிதா காந்தி கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 16 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் 13.10.64-ல் விடுவிக்கப்பட்டனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தது.
யார் ஆள்கிறார்களோ, அவர்களுடைய மனதையே முடிவுகள் வெளிப்படுத்துகின்றன!
- து.அரிபரந்தாமன்,
நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.
தொடர்புக்கு: hariparanthaman@gmail.com