நி
னைவிழத்தல் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக் கும் மருத்துவச் சாதனை நிகழ்ந்திருக்கிறது. மூளையின் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன என்பது பெரிய புதிராகவும் ஆராய்ச்சிக்குரிய பொருளாகவுமே இருந்துவந்தது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பில்தான் நினைவுகள் தங்குகின்றன என்றே சமீபகாலம்வரை அறிவியலாளர்கள் நம்பிவந்தனர். நியூரான்களுக்குள் உள்ள ரிபோநியூக்ளிக் ஆசிட் (ஆர்.என்.ஏ.) இதன் இருப்பிடமாக இருக்கலாம் என்பதை உணர்த்தும் சில சான்றுகள் தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளன. நியூரானில் உள்ள ஆர்.என்.ஏ. என்ற துகள்தான் மரபணுக்களைச் செயலுக்கு முடுக்குவது -செயல்படாமல் கிடத்துவது என்ற இரு வேறு செயல்களை ஒரே நேரத்தில் செய்துவரு கின்றன. ‘இநியூரோ’ பத்திரிகையில் இது தொடர்பான கட்டுரை வெளியாகியிருக்கிறது.
லாஸ் ஏஞ்செலீஸ் நகரின் கலிபோர்னியா பல் கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது. கடல் நத்தைகளை இதற்குப் பயன்படுத்தினர். நத்தைகளின் முதுகில் சைஃபன் கள் எனப்படும் உணர்கொம்புகள் உண்டு. தங்களுக்கு இடையூறு அல்லது வலியை ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஏற்பட்டால் நத்தைகள் உணர்கொம்புகளை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டுவிடும். இது சில விநாடிகள் மட்டுமே இருக்கும். பிறகு உணர்கொம்புகள் இயல்பு நிலைக்கு நீண்டுவிடும்.
நத்தைக்குத் தொடர்ந்து அதிர்ச்சியை அளித்தால் இந்த சைஃபன்களை உள்ளே இழுத்து வைத்துக்கொள்ளும் நேரமும் அதிகரிக்கிறது. அதிர்ச்சி ஏற்படுவதை நத்தைகள் நினைவில் வைத்துக்கொள்கின்றன என்று இதிலிருந்து தெரிகிறது. சோதனைக்காக, சில நத்தை களுக்குத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அதிர்ச்சி அளித்தனர். அதிக நேரம் அதிர்ச்சிக்குள்ளான நத்தை, உணர்கொம்புகளை 55 விநாடிக்கும் மேல் உள்ளே இழுத்துக்கொண்டது. இப்படி அதிக நேரம் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட நத்தையின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆர்.என்.ஏ., அதிர்ச்சியையே சந்திக்காத நத்தையின் உடலில் செலுத்தப்பட்டது. ஆர்.என்.ஏ. செலுத்தப்பட்ட நத்தையை லேசாக அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும் 38 விநாடிகளுக்கு அது தனது உணர்கொம்புகளை வெளியே எடுக்கவில்லை. டி.என்.ஏ. மெதிலேஷன் என்ற நடைமுறைப்படி நினைவுகளை ஆர்.என்.ஏ. கடத்துகிறது. ஆர்.என்.ஏ. தன் பங்குக்குச் சில வேதிப்பொருட்களை டி.என்.ஏ. துகளில் சேர்க்கிறது. இதனால் டி.என்.ஏ-க்கள் புரதத்தை உற்பத்திசெய்வதில் தடை ஏற்படுகிறது. இதற்கேற்ப நினைவிலும் மாறுதல் ஏற்படுகிறது.
சாதாரண நத்தைகளுக்கு டி.என்.ஏ. மெதிலே ஷன் நடைபெறாத வண்ணம் ஒரு வேதிப்பொருள் செலுத்தப்பட்டது. அதன்பிறகு அதிர்ச்சிக்குள் ளான நத்தையின் ஆர்.என்.ஏ.வை அவற்றுக்குச் செலுத்தினர். அவற்றுக்குப் பிற நத்தைகளின் நினைவுகள் சேரவில்லை. டி.என்.ஏ. மெதிலேஷன் மூலம்தான் நினைவுகளை ஆர்.என்.ஏ. கொண்டுசெல்கிறது என்பது இச்சோதனையில் நிரூபணமானது. இந்த சோதனைகள் தொடர்ந்தால், நினை விழத்தல் நோய்க்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடலாம். மூளை மாற்று சிகிச்சையைப் போல நினைவு மாற்று இப்போது நடந்திருக்கிறது!