சிறப்புக் கட்டுரைகள்

புதுச்சேரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024

செய்திப்பிரிவு

தமிழகத்தின் அருகே இருந்தாலும் புதுச்சேரியின் கலாச்சாரம், பண்பாடு தொடங்கி அரசியல் வரை பல விஷயங்களில் கணிசமான வேறுபாடு உண்டு. பிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு கீழ் இருந்த புதுச்சேரிக்குத் தற்போதும் பிரெஞ்சு தொடர்புகளே அதிகம். இன்றைக்கு இந்தியாவின் ஒன்றிய பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கும் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது 1954-ல் தான்.

புதுச்சேரியில் மீன்பிடித்தொழில், சுற்றுலா, உணவு விடுதி, மதுபான விற்பனையே முக்கிய வருவாய் ஈட்டும் தொழில்கள். யூனியன் பிரதேசமான புதுச்சேரி காங்கிரஸுக்கு செல்வாக்கு மிக்க பகுதி. நீண்டகாலமாகக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகமான முறை போட்டியிட்டு வென்றுள்ளனர். அக்கட்சியின் சார்பில் சண்முகம், பாரூக், நாராயணசாமி ஆகியோர் வென்ற தொகுதி. காங்கிரஸைத் தவிர திமுக, அதிமுக, பாமகவுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதி. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு வென்றது.

புதுச்சேரி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 10,20,914

⦁ ஆண் வாக்காளர்கள்: 4,79,329
⦁ பெண் வாக்காளர்கள்: 5,41,437
⦁ மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 148

முந்தைய தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள்


ஆண்டு
வெற்றி பெற்றவர் 2-ம் இடம் பிடித்தவர்

1971

மோகன் குமாரமங்கலம், காங்
சேதுராமன், ஸ்தாபன காங்

1977
அரவிந்த பால பஜனோர், அதிமுக அன்சாரி துரைசாமி, ஸ்தாபன காங்

1980
சண்முகம், காங் லட்சுமி நாராயணன், ஜனதா

1984
சண்முகம், காங் திருநாவுக்கரசு, திமுக

1989
சண்முகம், காங் மணிமாறன், திமுக

1991
பாரூக், காங் லோகநாதன், திமுக

1996
பாரூக், காங் ஆறுமுகம், திமுக

1998
ஆறுமுகம், திமுக சண்முகம், காங்

1999
பாரூக், காங் ராமதாஸ், பாமக

2004
ராமதாஸ், பாமக லலிதா குமாரமங்கலம், பாஜக

2009
நாராயணசாமி, காங் ராமதாஸ், பாமக

2014
ராதாகிருஷ்ணன், என்.ஆர்.காங் நாராயணசாமி, காங்

2019
வெ. வைத்தியலிங்கம், காங்கிரஸ் DR. நாராயணசாமி கேசவன், என்.ஆர்.காங்

2019-ம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தேர்தலின் நிலவரம்:

2024-ம் ஆண்டு புதுச்சேரி மக்களவைத் தொகுதி: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

SCROLL FOR NEXT